கொல்கத்தா: மேற்கு வங்காளம் சாகர்திகி  சட்டப்பேரவை தொகுதி, மகாராஷ்டிரா மாநில பாஜக கோட்டையான கசாபாபேட் தொகுதி மற்றும் ஈரோடு கிழக்கு தொதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

மேற்குவங்க மாநிலம் சாகர்திகி  இடைத்தேர்தலில்  சுமார் 51 ஆண்டுகளுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி  வெற்றியை  பெற்றுள்ளது.

3மாநில சட்டமன்ற தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.  பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது.

இதில், ஈரோடு கிழக்கு தொகுதியில்,  ண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் சாகர்திகி   தொகுதியில் நடைபெற்ற  இடைத்தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பெய்ரோன் பிஸ்வாஸ் வெற்றி பெற்றுள்ளார். சுமார் 51 ஆண்டுகளுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி  இந்த வெற்றியை பெற்றுள்ளது.

மராட்டியத்தில் கசாபா பேட் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர் வெற்றி பெற்றுள்ளார். பாஜாகவின் கோட்டையான கசாபா பேட் தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் ஹேமந்த் ராசானேவை காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.