டில்லி
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கவுரவ் கோகாய் பிரதமர் மோடிக்கு 3 முக்கிய வினாக்களை எழுப்பி உள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மத்திய அரசு மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் அளிக்க வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மணிப்பூர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்ட மக்களவை தற்போது மீண்டும் கூடி உள்ளது.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மக்களவையில் விவாதம் தொடங்கியது. விவாதத்தைக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கவுரவ் கோகாய் விவாதத்தை தொடங்கி வைத்தார்.
அவர் மூன்று முக்கிய கேள்விகளை முன்வைத்தார்.
1.மணிப்பூர் வன்முறை பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில் பிரதமர் மோடி இதுவரை ஏன் மணிப்பூர் செல்லவில்லை..?
2. மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடி ஏன் 80 நாட்களுக்கு பிறகே பதில் அளித்தார்..? அந்த பதிலும் வெறுமனே 30 வினாடிகள் மட்டுமே இருந்தன.
3.மணிப்பூர் வன்முறை தொடர்பாக மாநில முதலமைச்சர் பைரன் சிங்கை பிரதமர் மோடி பதவியிலிருந்து நீக்காதது ஏன்..?
என்னும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.