டெல்லி: மாநில அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்தி வைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. நீட் ரத்து, ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்பட தமிழகஅரசின் பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் தமிழகஅரசின் திட்டங்கள் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி செயல்பாடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
அந்த தீர்மானத்தில், தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 22க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதாக குற்றசாட்டியுள்ளார்.
இந்த ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா அனுமதி வழங்குவரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.