கொல்கத்தா

காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மம்தா பானர்ஜி ஒரு சந்தர்ப்பவாதி என விமர்சித்துள்ளார்.

நெருங்கி வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாகத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே வழங்க திரிணாமூல் காங்கிரஸ் முன்வந்தது. இதைக் காங்கிரஸ் ஏற்காததால் கூட்டணியில் சலசலப்பு நீடிக்கிறது.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால், தனித்துப் போட்டியிடவும் கட்சி தயங்காது என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம்,

” மம்தா பானர்ஜியின் தயவில் இந்த முறை தேர்தல் நடைபெறாது.  மம்தா பானர்ஜி ஒதுக்கிய 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வையும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியையும் தோற்கடித்துள்ளது. 

காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் எப்படிப் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது தெரியு ம். மம்தா பானர்ஜி ஒரு சந்தர்ப்பவாதி. அவர் கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தயவில்தான் ஆட்சிக்கு வந்தார்”  

என்று தெரிவித்த்துள்ளார்.