ஜெய்ப்பூர்: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா‘ இன்றுடன் 100வது நாள் நிறைவுபெறுகிறது. இன்றைய யாத்திரையும், ராகுலுடன் ஹிமாசல் முதல்வர் ர் சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி மற்றும் ஹிமாசல் காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். ராகுல் யாத்திரையின் 100வது நாளையொட்டி, ராஜஸ்தானில் காங்கிரசார் இசை நிகழ்ச்சியுடன் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

ராகுலின் யாத்திரையின் 100வது நாளையொட்டி, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா   செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது. இந்த ய யாத்திரை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆகிய 8 மாநிலங்களைக் கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. வரும் 20ந்தேதி வரை ராஜஸ்தானில் ராகுல் யாத்தை நடைபெறுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இன்றைய  100வது நாள் ஒற்றுமை நடைப்பயணத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி மற்றும் ஹிமாசல் காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் உள்பட  காங்கிரஸ் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ராகுலின் இன்றைய யாத்திரைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து. சச்சின் பைலட்டின் நாடாளுமன்றத் தொகுதி  ராஜஸ்தானின் தௌசா பகுதியில் பெரிய அளவிலான மக்கள் கூட்டம் கூடியிருந்தனர். ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொள்பவர்களை ஆதரிக்கும் விதமாக வழி நெடுகிலும் மக்கள் கூடியிருந்தனர்.

ராகுல் காந்தியுடன் சச்சின் பைலட் நடைப்பயணத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். சிறிது தூரம் சென்ற இந்த நடைப்பயணத்தில் ஹிமாசலின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுக்விந்தர் சிங் சுகு மற்றும் துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்து கொண்டனர்.

இந்த நடைப்பயணமானது மொத்தம் 3,570 கிலோ மீட்டர் கடந்து 150-வது நாளில் காஷ்மீரை அடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.