காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும் உ.பி. மாநில முதல்வர் வேட்பாளருமான பிரியங்கா காந்தியிடம்

நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சி தலைவராக முடியுமா ? என்று என்.டி.டி.வி. நிருபர் கேட்ட கேள்விக்கு

ஏன் முடியாது ? கண்டிப்பாக யார் வேண்டுமானாலும் தலைவராக வரமுடியும் என்று பிரியங்கா காந்தி கூறினார்.

இதனைத் தொடர்ந்து அந்த நிருபர் கேட்ட கேள்விகளும் அதற்கு பிரியங்கா காந்தியின் பதிலும் :

நிருபர் : அப்படி எந்த தடையும் இல்லை என்று நினைக்கிறீர்களா ?

பிரியங்கா : கண்டிப்பாக இருக்காது. உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட என்ன பிரச்சனை இருக்கப்போகிறது ?

நி : அப்படியான தேர்தலாக அது இருக்குமா ?

பி : அப்படியான தேர்தலாக இருக்கும் என்று தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

நி : யதார்த்தத்தில் அது போல் நடக்கும் என்று நினைக்கிறீர்களா ? உதாரணமாக, ராகுல் போட்டியிட்டால் அவருக்கு எதிராக யாராவது நிற்பார்களா ?

பி : ஏன் நடக்காது ? கடந்த காலங்களிலும் இதுபோல் நடந்துள்ளது, எனது தாயாருக்கு எதிராகவும் தேர்தலில் போட்டியிட்டார்கள்,

நி : எனவே அனைவருக்கும் வாய்ப்பு திறந்திருக்கிறதா ?

பி : அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம், ஆனால் தயவு செய்து இன்று நகர்ப்புறங்களில் பார்க்கிறதை விடவும், களத்தில் உள்ள யதார்த்தத்தை விடவும் இன்னொன்று இருக்கிறது என்று புறக்கணிக்காதீர்கள், காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் உறுதியாக இருக்கிறார்கள் அவர்கள் நம்பும் சில தலைவர்கள் உள்ளனர்.

நி : உங்கள் குடும்பத்தைப் பற்றி நீங்கள் சொல்வதாக நினைக்கலாமா ?

பி : அதை ஒதுக்கிவிட முடியாது

நி : நேரு குடும்பத்தின் மீதான ஈர்ப்பு சாதாரண தொண்டர்களுக்கு இன்னும் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ?

பி : நான் மூத்த தலைவர்களைப் பற்றி பேசவில்லை, மாவட்ட அளவிலான சாதாரண அடிமட்ட தொண்டர்களைப் பற்றி பேசுகிறேன், அவர்களில் பலருக்கு அந்த உணர்வு இருக்கிறது. “உங்களை நாங்கள் நம்புகிறோம், கட்சிக்கு எது சரியோ அதைச் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருந்தார்.