பூர்தலா

ஞ்சாபில் நடந்த மாநகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று பாஜக இறுதி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த மாதம் 14 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடைபெற்றன.   இந்த தேர்தலில் 71.39% வாக்குகள் பதிவாகின.  இந்த தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.  இந்த தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 7 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

கபூர்தலா :   காங்கிரஸ் – 45,      சி அ த -3,     மற்றவை 2

அபோகர் :    காங்கிரஸ் – 49      சி அ த – 1

மோகா:         காங்கிரஸ் 20,         சி அ த – 15  ஆம் ஆத்மி -4,  பாஜக 1, மற்றவை 10

பதாலா:        காங்கிரஸ் 36         சி அ த – 6,   ஆம் ஆத்மி – 3,  பாஜக -4 மற்றவை – 1

பதிந்தா :      காங்கிரஸ் – 43,      சி அ த -7

ஹோசியார்பூர்  : காங்கிரஸ் -41.  பாஜக – 4. ஆம் ஆத்மி -2, மற்றவை – 3

பதான்கோட் : காங்கிரஸ் – 37  பாஜக – 11,   சி அ த – 1  மற்றவை 1

தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் முதல் இடத்திலும், சிரோமணி அகாலி தளம் இரண்டாம் இடத்திலும், ஆம் ஆத்மி 3 ஆம் இடத்திலும் பாஜக 4 ஆம் இடத்திலும் உள்ளன.   விவசாயிகள் போராட்டம், காரணமாக பாஜகவுக்கு கடும் தோல்வி ஏற்பட்டு கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்