சென்னை:
.மா.காவை சேர்ந்த வேலூர் ஞானசேகரன், திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்   கருப்பசாமிபாண்டியன்  ஆகியேர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுக கட்சியில் இணைந்தனர்.
jay
இதுகுறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், ஜெயலலிதாவை  இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும்,வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி..ஞானசேகரன்  தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த வேலூர் மாநகராட்சி 34-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்  மு. சீனிவாசகாந்தி, தென் சென்னை மேற்கு மாவட்டத் தலைவர்  சேகர் உள்ளிட்ட வேலூர், சென்னை, திருவள்ளூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட 69 பேர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்   திருநெல்வேலி கருப்பசாமிபாண்டியன் தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.