லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் ஸ்மார்ட் போன் இலவச ஸ்கூட்டர், விவசாய கடன் தள்ளுபடி, 20லட்சம் அரசு வேலைகள் உள்பட 7 அதிரடி அறிவிப்புகளை  காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு  மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். அங்கு 2022ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள யோகி தலைமையிலான பாஜகவும் போராடி வருகிறது.

உ.பி.யில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதன் ஒருபகுதியாக, இப்போது அதிரடி 7 அறிவிப்புகளை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 40 டிக்கெட்  மற்றும் கடன் தள்ளுபடி, மின்கட்டண பில் 50% தள்ளுபடி என ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள.

காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள 7 முக்கிய அறிவிப்புகள் விவரம்

1. பெண்களுக்கு 40% டிக்கெட்
2. பெண்களுக்கான ஸ்கூட்டி மற்றும் ஸ்மார்ட்போன்
3. விவசாய கடன் தள்ளுபடி
4. நெல் மற்றும் கோதுமையின் 2500 ரூபாய், கரும்புக்கு  விலை ரூ 400 என நிர்ணயிக்கப்படும்.
5. கோவிட் காலத்தின் மின்சாரம் பில் 50%  தள்ளுபடி.
6. கோவிட் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி
7. 20 லட்சம் புதிய அரசு வேலைகள்

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2022) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், வர இருக்கும் தேர்தலில் வெற்றி பெற தீவிரமாக களமிறங்கி உள்ளது.

அதற்காகவே தற்போது முதல்கட்டமாக  7 வாக்குறுதிகளை உ.பி காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் ஸ்மார்ட் போன்: உ.பி.யில் இலவச அறிவிப்புகளுடன் களத்தில் குதித்தார் பிரியங்கா….