டில்லி

பாஜக இதுவரை சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் முதல்வர் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக அமோக வெற்றி பெற்றது.  பாஜக மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டு ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

இவ்வாறு 3 மாநிலத்தில் பெற்ற வெற்றியால் பாஜகவுக்கு ஊக்கமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.  ஆனால் நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் இதுவரை முதல்வர்களை பாஜக அறிவிக்கவில்லை.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பதிவில், கடந்த டிசம்பர் 3-ம் தேதி பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியும் முதல்சஎகள் நியமிப்பதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்களில் அனைவராலும் விமர்சிக்கப்படுவதாக பதிவிட்டுள்ளார்.

அவர்,மூன்று நாட்கள் கடந்தும், சத்தீஷ்கார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கான முதல்-மந்திரிகளை கூட பாஜகவால் அறிவிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவின் ஒருநாள் முன்னதாகவே முதல்-மந்திரியாக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் 1 மணிக்குப் பதவியேற்றுள்ளார்.