துரை

துரையில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் வருவதால் மாநகராட்சி வரவேற்பு ஏற்பாடுகள் செய்வதற்கு காங்கிரஸ் உள்ளிட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளதற்கு மாநகராட்சி பதில் அளித்துள்ளது.

தமிழக அரசு தொடர்ந்து ஆர் எஸ் எஸ் போன்ற மதவாத இயக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  குறிப்பாக திமுக கூட்டணி கட்சிகள் மதவாத இயக்கங்களை அடியோடு வெறுத்து வருகின்றன.  இந்நிலையில் மதுரை மாநகருக்கு ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் வர உள்ளார்.   இது குறித்து மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அந்த சுற்றறிக்கையில், மதுரை மாநகராட்சி மண்டலம் 4 சத்யசாய் நகரில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்க உள்ளதாகவும் அவர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து நிகழ்வு நடைபெறும் இடம் வரை உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல் மற்றும் அவர் பயணிக்கும் நேரங்களில் மாநகராட்சி சீரமைப்பு பணிகள் நடக்காமல் இருப்பதைக் கண்காணித்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.   இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள இடையே கடும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.

விருதுநகர் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது டிவிட்டரில் அமைச்சர் நேருவிடம் ”ஆர் எஸ் எஸ் தலைவருக்கு வரவேற்பு, மதுரைக்கு வந்த சோதனை, நடவடிக்கை தேவை மதவாதிக்கு உதவும் அதிகாரிகள் மீது.  செய்வாரா அண்ணன் கே என் நேரு?” என பதிந்துள்ளார்.

மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு வெங்கடேசன், ” அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றரிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்.”  என டிவிட்டரில் கேள்வி எழுப்பு உள்ளார்.

இது குறித்து மதுரை மாநகாராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், “இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர்கள் பயணம் செய்யும்போது, அது தொடர்பான விதிகளின்படி பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கமாக சில முன்னேற்பாடுகள் செய்யப்படும். அதன் அடிப்படையில் மட்டுமே விதிமுறைகளின்படியான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கமான நிர்வாக நடைமுறைகளின் படி உயர் அலுவலர்கள் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக தவறுதலாக புரிந்து கொள்ளும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.” என பதில் அளித்துள்ளார்.