புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியதற்கு சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், சோனியா காந்தி கடந்த வாரத்தில் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

கடந்த புதன்கிழமை மாலை, அவர் கொரோனா சோதனை செய்தார். சோனியா காந்தி லேசான அறிகுறி தெரிய வந்ததையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.