நாகர்கோவில்: கிள்ளியூர் தொகுதிக காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார் 98,721 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.  அங்கு காங்கிரஸ் வேட்பாளராக ராஜேஷ் குமார் களமிறங்கினார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் தமாகா வேட்பாளர் ஜூட் தேவ் களமிறக்கப்பட்டார். வாக்கு எண்ணிக்கையில் தமாகா வேட்பாளரை விட் காங்கிரஸ் வேட்பாளர்  45-ஆயிம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிவாகை சூடினார்.