
சென்னை,
2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆனது மகிழ்ச்சி அளிப்பதாக டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
2ஜி வழக்கில் இருந்து திமுக ராஜா, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக சிபிஐ கோர்ட்டு நீதிபதி சைனி அறிவித்து உள்ளார்.
இந்நிலையில் திமுகவினர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், டிடிவி தினகரனும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
நான் பார்த்து பழகியவர்கள், தமிழர்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என நான் நினைக்க மாட்டேன்.. அது நல்ல பண்பாடு இல்லை… விடுதலையானதில் மகிழ்ச்சி, அவர்களுக்கு வாழ்த்துக்கள் எதிர்கட்சி என்பதற்காக எதும் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel