சென்னை,

2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ஆ.ராசா விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திமுகவை சேர்ந்த ராஜா, கனிமொழி உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

திமுக மீது சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது

இதன் காரணமாக  டில்லி பாட்டியாலா  நீதிமன்றம் முன்பு கூடியிருந்த திமுக நிர்வாகிகள் உற்சாகம் அடைந்தனர்.  பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இந்நிலையில், தீர்ப்பு குறித்து கேள்விபட்டதும், திமுக செயல்தலைவரும் ஸ்டாலின் சந்தோஷமடைந்தார். தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

டில்லி தனி நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்பில் திமுகவினர் எந்த குற்றச்சாட்டிலும் ஈடுபடவில்லை என்பதை தெளிவு படுத்தி உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அழிக்க வேண்டும் என நினைத்து போடப்பட்ட வழக்கு இது என்ற ஸ்டாலின், இந்த வழக்கு  குறித்து நாட்டு மக்களிடையே  ஊடகங்கள்தான் பரப்பியது. தற்போது இந்த குற்றச்சாட்டில் இருந்து திமுக விடுவிக்கப்பட்டதையும்,    தற்போது அந்த வழக்கின் தீர்ப்பையும் ஊடகங்கள் மக்களிடையே பரப்ப வேண்டும் என்றும்,  இந்த தீர்ப்பின் விவரங்களை பரப்ப வேண்டும். தீர்ப்பு குறித்து மக்களிடத்தில் எடுத்துச்செல்ல வேண்டும் என்று ஊடகத்தினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

வழக்கில் இருந்து திமுகவினர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.