க்னோ

.பி மாநிலத்தில் மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விவேக் பிரதான்,  இவர் சமீபத்தில் வாட்ஸ்அப் குழு ஒன்றில் ராகுல் காந்தியை பப்பு என குறிப்பிட்டதற்காக கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எதிர்கட்சிகள் பலவும் ராகுல் காந்தியை பப்பு என அழைப்பதை ஒரு வழக்கமாகக்கொண்டுள்ளனர்.   பப்பு என்பதற்கு குட்டிப்பையன் என ஒரு அர்த்தம் உண்டு.  ஆனால் ஒரு காங்கிரஸ் தலைவரே அப்படி அழைத்து அதனால் அவர் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸ் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்று உள்ளது.  இதில் மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விவேக் பிரதான், கருத்து ஒன்றை பதிந்திருந்தார்.

பல தொழிலதிபர்கள் (அதானி, அம்பானி, மல்லையா) உடன் பப்பு சேர்ந்து இருந்தால் அவர்களின் ஆதரவுடன் அவரால் அமைச்சராகவோ, பிரதமராகவோ ஆகி இருக்க முடியும்.   ஆனால் பப்புவுக்கு அது பிடிக்கவில்லை.  மத்திய பிரதேச மாநில விவசாயிகளை சந்தித்து அவர்களின் ஆதரவையே கோருகிறார்.

இவ்வாறு வினய் ராகுலை பாராட்டி இருந்தாலும், அந்த பப்பு என்னும் ஒரு வார்த்தைக்காக அவருடைய பதிவுகள் ஃபோட்டோ ஷாட் எடுக்கப்பட்டு மேலிடத்துக்கு அனுப்பப்பட்டது.  அவர் கூறிய சமாதானங்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டன.  அவரைக் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கட்சி மேலிடம் அறிக்கை வெளியிட்டுள்ளது