எடப்பாடி, டிடிவி ஆதரவாளர்கள் இடையே மோதல்! அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’!

Must read

திருவாரூர்,

முதல்வர் எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நன்னிலம் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவு காரணமாக எடப்பாடி அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் களமிறங்கி உள்ளார். அவர் புதியதாக தனது ஆதரவாளர்களை கட்சி நிர்வாகிகளாக நியமனம் செய்து வருகிறார்.

இதன் காரணமாக  பல இடங்களில் அதிமுகவினரிடையே மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நன்னிலத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற, அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்களுக்கும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும்  இடையே மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்த பகுதியில்  50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து  திருவாரூர் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி இருதரப்பினர் இடையேயும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால், அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

More articles

Latest article