சென்னை,
இன்று தமிழக சட்டசபையில் சபாநாயகர் மீது தி.மு.க நம்பிக்கையில்லாத் தீர்மானம் நடைபெற இருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை நிரூபித்த அன்று நடைபெற்ற அமளி காரணமாக திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து எடப்பாடி வெற்றிபெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
இதை கண்டித்து, “நம்பிக்கை வாக்கெடுப்பில சபாநாயகர் நடுநிலை யாக நடந்து கொள்ளாமல் ஆளும் தரப்புக்கு ஆதரவாக நடந்து கொண்ட தால் சபாநாயகர் மீது நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும்” எனக் கூறி இருந்தனர். 35 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெ ழுத்திட் டாலே சபாநாயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரலாம் என்று விதி இருப்பதால் தி.மு,க உறுப்பினர்கள் கொடுத்த மனுவை சட்டப்பேரவைச் செயலகம் ஏற்றுக்கொண்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று சபாநாயர்மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது ஓட்டெடுப்பு நடைபெற இருக்கிறது.
இதற்கிடையில், வெற்றிவேலின் புகாரை அடுத்து, திமுக உறுப்பினர்கள் மீது உரிமீறல் குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த விசயத்திலும் சபாநாயகர் இன்று அதிரடி முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று சட்டசபை பரபரப்பாக நடைபெறும் என்பதில் ஐயமில்லை.