மதுரை: தேசத்தையும், பிரதமரையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம்.
‘
கன்னியாக்குமரி மாவட்டம் அருமனையில், நடைபெற்ற கிறிஸ்தவ கூட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாரத மாதா, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியதுடன், நாங்கள் போட்ட பிச்சையால் திமுக வெற்றி பெற்றது என கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, பல்வேறு தரப்பினர் ஜார்ஜ் பொன்மையாமீது புகார் கொடுத்தனர். இதையடுத்து, அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் குமரியில் இருந்து எஸ்கேப்பான பாதிரியால், மதுரை அருகே கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, ஜாமினில் விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும்,அரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,வயது முதிர்வு மற்றும் இதய நோயாளியாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உள்ளதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில்,அவர் தினமும் கையெழுத்திட வேண்டும்,அதேபோல இனிமேல் அமைதியை குழைக்கும் வகையில் பேசமாட்டேன் என அவர் பிரமாணப்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.