7967 விருப்ப மனுக்களுடன் நிறைவு பெற்றது திமுகவின் விருப்பமனு தாக்கல்

Must read

சென்னை:
திமுகவின் விருப்பமனு தாக்கல் நிறைவு பெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டுமென திமுகவும் ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக் கொண்டே ஆக வேண்டுமென அதிமுகவும் முனைப்பு காட்டிவருகிறது.

திமுக ஐபேக் நிறுவனத்துடன் கைகோர்த்து தீவிரமாக திட்டம் போட்டு வருவதால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக திமுகவினர் கூறிவருகின்றனர். அதிமுகவை பொறுத்தவரையில், முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓபிஎஸ் போடி தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் கெளத்தூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனு அளித்துள்ளார்.

இந்நிலையில் திமுகவின் விருப்பமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 17ஆம் தேதி துவங்கிய திமுகவின் விருப்ப மனு விநியோகம் இன்று நிறைவுபெற்றது. திமுக வரலாற்றில் அதன் தலைவரே விருப்பமனு அளித்த நிகழ்வும் இன்று அரங்கேறியது. திமுக சார்பில் போட்டியிட 8388 விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 7967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

More articles

Latest article