கவுகாத்தி
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இன்று அசாம் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
நேற்று மத்திய பாஜக அரசின் உள்துறை அமைச்சகம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்கியது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர் அல்லாதோர் இந்தியக் குடியுரிமை பெற முடியும்.
நாடெங்கும் இந்த புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக அசாமில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராகத் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல பகுதிகளில் அசாம் மாணவர் அமைப்புகள் நேற்று இந்த சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டன.
இன்றும் அசாம் மாநிலத்தில் டார்ச் லைட் பேரணி, சத்தியாகிகரம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவித்து உள்ளன. மேலும் 16 எதிர்க்கட்சிகள் இணைந்த ஐக்கிய எதிர்க்கட்சி மன்றம் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு (பந்த்) நடத்த அழைப்பு விடுத்து உள்ளது.
அசாம் மாநிலத்தில் நடைபெறும் போராட்டங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.