சென்னை:
தனது பிறந்தநாளையொட்டி புதிய செயலியை அறிமுகப்படுத்திய கமல், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த கமல், தேர்தலை எதிர்கொள்ள கால அவகாசம் தேவை என்று குறிப்பிட்டார்.
ஒரு படம் எடுக்கவே 6 மாத அவகாசம் தேவைப்படும்போது, கட்சி ஆரம்பிக்க பலமான அடித்தளம் தேவை என்று குறிப்பிட்டார்.
நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன் என்றும் இனிமேல் வெளியே செல்ல மாட்டேன் என்ற கமல், பழைய பேக்கேஜ்களுக்கு தனது கட்சியில் இடமில்லை என்பதையும் தெரிவித்த்ர்.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவீர்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கமல்,
மக்களுககான வெற்றி கிடைக்கவும், நல்ல தமிழ்நாட்டை உருவாக்க, செய்ய வேண்டியதை செய்யும் வேட்பாளர்களை தேர்வு செய்வேன் என்று கூறினார்.
மேலும், உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தலைகளையும் சந்திக்க அவகாசம் தேவை என்றார்.
மேலும், தற்போதுள்ள தலைவர்களில் இருந்து எவ்வாறு மாறுபடுவீர்கள் என்ற கேள்விக்கு, தற்போதைய களத்திற்கான தலைவனாக வரவே தான் விரும்புவதாக கூறினார்.