காஷ்மீர் சென்ற கம்யூனிஸ்டு தலைவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

Must read

டில்லி:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பபட்டுள்ள நிலையில் அங்கு பல இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,காஷ்மீர் செல்ல முயன்ற கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர்  ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர்.

நேற்று காஷ்மீர் செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் டில்லி அனுப்பப்பட்ட நிலையில், இன்று காஷ்மீர் செல்ல முயன்ற கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி விமான நிலையத்தை விட்டு வெளியே போகக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும்  விரைவில் டெல்லி திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article