சென்னை: கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா 102-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா, கம்யூனிசமும், போராட்டமும், சிறை வாழ்க்கையுமாக நூற்றாண்டை அவர் கடந்து வந்திருக்கிறார். இன்று 102ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு அனைத்து தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சங்கரய்யா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது இல்லத்துக்கு நேரில் செந்று அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இதுதொர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ‘தகைசால் தமிழர்’ திரு. சங்கரய்யா அவர்களின் 102-ஆவது பிறந்தநாள்!

பொதுவாழ்விலும் பொதுவுடைமை இலட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு! என கூறியுள்ளார்.