நெல்லை

ரும் 4 ஆம் தேதி அன்று நெல்லை – திருச்செந்தூர் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

கடந்த மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக நெல்லை-திருச்செந்தூர் இடையிலான ரயில் பாதை பல இடங்களில் சேதமடைந்தது. எனவே 17 ஆம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் ரெயில்களின் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது

ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.   இரவு பகலாக அதிநவீன உபகரணங்களைக் கொண்டு பொறியாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இரவு பகலாகப் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெற்கு ரயில்வே நிர்வாகம் இந்த பணிகள் அனைத்தும் 4 ஆம் தேதி மாலைக்குள் நிறைவு பெறும் எனவும், அதன் பின்னர் தண்டவாளத்தில் இன்ஜின்களை இயக்கி சோதனை செய்து 6-ந்தேதி முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையிலான பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.