டில்லி

வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை, வணிக பயன்பாடு எரிவாயு  சிலிண்டர் விலை நிர்ணயம் செய்கின்றன.

இதனால் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.  இன்று  வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57 குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.1,999.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.57 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனால் ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,942 – ஆகக் குறைந்துள்ளது.  இரு மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது வணிகர்களுக்குச் சற்று ஆறுதலை அளித்துள்ளது.