சென்னை:

திமுக புரட்சி தலைவி அணி நிர்வாகிகள் சென்னை வர ஓ.பன்னீர்செல்வம் திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே டிடிவி தினகரன், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகளை நாளைக்கு தலைமைக்கழகம் வர அறிவித்துள்ள நிலையில், தற்போது ஓபிஎஸ்-சும் சென்னைக்கு வர அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடி அணிக்கு விடுத்திருந்த கெடு இன்று முடிகிறது. இதையடுத்து, ஆரம்பத்தில் அதிமுக தலைமை கழகம் வருவேன் என்று அறிவித்த டிடிவி தினகரன், தற்போது, மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறேன் என்று அறிவித்து உள்ளார்.

இந்நிலையில், தமிழகம் முழுதும் உள்ள தனது அணியின் மாவட்ட நிர்வாகிகள் சென்னை வர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அணிகள் இணைப்பு குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஏற்கனவே வரும் 10ந்தேதி தமிழகம் முழுவதும் எடப்பாடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]