டில்லி
தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் கே வி விஸ்வநாதன் உள்ளிட்ட இருவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்திய உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள நீதிபதி பணியிடங்கள் 34 ஆகும். இதில் கடந்த 2 நாளில் நீதிபதிகள் தினேஷ் மகேசுவரியும், எம்.ஆர்.ஷாவும் ஓய்வுபெற்றனர். இதையொட்டி 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, சஞ்சீவ் கன்னா ஆகியோரைக் கொண்ட ‘கொலீஜியம்’ (நீதிபதிகள் நியமனங்களுக்கான மூத்த நீதிபதிகள் குழு) கூடியது.
கூட்டத்தில் ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஷ்ராவையும், மூத்த வழக்குரைஞர் கே.வி.விஸ்வநாதனையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப் பரிந்துரை செய்வது என ஒருமனதாக முடிவு செய்து பரிந்துரைக்கப்பட்டது.
மத்திய அரசு இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டால், தற்போதைய தலைமை நீதிபதி ஜே.பி.பர்திவாலா 2030 ஆகஸ்டு 11-ந் தேதி ஓய்வு பெறுகிறபோது, கே.வி.விஸ்வநாதன், தலைமை நீதிபதியாகி, 2031 மே 25-ந் தேதி வரை அந்தப் பொறுப்பில் இருப்பார்.