சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 21ந்தேதி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி,  பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும், ஜூன் அல்லது ஜூலையில் அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு  கல்லூரி இறுதியாண்டு தேர்வு கண்டிப்பாக நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்றுசென்னையில்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  பொன்முடி, தமிழ்நாடு முழுவதும் 20,00,875 கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் தேர்வை எழுத தயாராகி வருகின்றனர். ஏற்கனவே  கடந்த நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனிலும என்று கூறியவர், ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவதால் 12.94 லட்சம் கலை கல்லூரி மாணவர்கள் பயனடைவர், பல்கலைக்கழகங்களில் பயிலும் 52,301 மாணவர்களும், 4.57 பொறியியல் மாணவர்களும். 1.97 லட்சம் பாலிடெக்னிக் மாணவர்களும் பயன் அடைவார்கள் என்று கூறியவர் அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடத்தப்படும் என்றும் கூறினார்.

ஆனால்,  இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாகவே நடைபெறும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மாணாக்கர்களின் கோரிக்கை ஏற்பு: கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் பிப்.1 முதல் ஆன்லைனில் நடைபெறும் என அமைச்சர் அறிவிப்பு…