சென்னை:
கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், “அகில இந்தி இந்து மகா சபா” என்ற அமைப்பின் மாநில செயலாளர் இல. கணபதி அனுமான் என்பவர், தனது முகநூல் பக்கத்தில் அதிர்ச்சி அளிக்கும் பதிவு ஒன்றை வெளியி்ட்டார்.

அந்த பதிவில், “இந்து சகோதரர்கள் ஒரு வேண்டுகோள். ஆளுக்கு ஆயிரம் ரூபாய் 5000 நபர்கள் தாருங்கள் மூன்று மாதம் காளிக்கு ஐந்து பலி நான் தர ஏற்பாடு செய்கிறேன். கண்டிப்பாக நடக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், தனது வங்கி கணக்கு எண்ணை தெரிவித்தும் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
சமீபத்திய கோவை கலவரத்தின்போது, இஸ்லாமியர்களை குறிவைத்தே இந்துத்துவ நபர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில், இஸ்லாமியரை கொல்வதற்காக என்பதை மறைமுகமாக “காளிக்கு பலி” என்று பதிவிட்டு வெளிப்படையாக பணம் வசூலிக்க முயற்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த இல.கணபதியை தொடர்புகொள்ள அவரது செல் எண்ணுக்கு முயற்சி செய்தோம். தொடர்புகொள்ள முடியவில்லை. தற்போது அவரது பேஸ்புக் பக்கத்தையும் முடக்கியிருக்கிறார்.
ஏற்கெனவே அவரது அறிவிப்பைப் பார்த்து எத்தனை பேர் பணம் அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை. ஆள் இப்போது எஸ்கேப் என்பது மட்டும் புரிகிறது.
Patrikai.com official YouTube Channel