திருவண்ணாமலை
ஆவணி மாத பவுர்ணமியை ஒட்டி நடைபெற இருந்த திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு இட்டுள்ளார்.
தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்றாகும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் இந்த மலையைச் சுற்றி வந்து கிரிவலம் செய்வது வழக்கமாகும்.
சமீபகாலமாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்யப் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா குறைந்து வருவதால் ஆவணி மாதம் பவுர்ணமி அன்று கிரிவலம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பக்தர்கள் நினைத்திருந்தனர். ஆனால் கொரோனா அச்சம் முழுமையாகக் குறையாததால் நாளை மாலை 7 மணி முதல் 22 ஆம் தேதி மாலை 6 மணி வரை கிரிவலம் செய்ய ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.