சென்னை

க்லைஃப் திரைப்படம் தமிழகத்தில் 3 நாட்கள் ஈட்டிய வசூல் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் 38 வருடங்களுக்கு பிறகு உருவான படம்தக் லைஃப்‘. இதில் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசைப்புயல் .ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. கர்நாடகாவில் மட்டும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்படம் வெளியாகவில்லை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் லைப் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இந்த நிலையில், மூன்று நாட்களில் தக் லைஃப் திரைப்படம் தமிழ் நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மூன்று நாட்களில் தமிழ் நாட்டில் மட்டும் ரூ. 26 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

[youtube-feed feed=1]