கோவை முதலிடம்: பிளஸ்1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது!

Must read

சென்னை:
மிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தப்டி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியானது. இதில் கோவை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இன்று காலை 9.30 மணி அளவில்  பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை tnresults.nic.indge1.tn.nic.indge2.tn.nic.in என்ற இணைய பக்கத்தில் மாணவர்கள் காணலாம்.
பிளஸ் 1 தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர்களில் 97.49 விழுக்காட்டினரும், மாணவர்களில் 94.38 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
11 ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 3.11% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளதாக வும் இயற்பியல்- 96.66%, வேதியியல்-99.95%, கணக்கு பதிவியல்- 98.16%, உயிரியல்- 97.64%, கணிதம்-98.56%, தாவரவியல்-93.78%, விலங்கியல்-94.53%, கணிதம்-98.56% ஆக தேர்ச்சி விகிதம் இருப்பதாகவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும், 98.10% தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடத்திலும், 97.90% தேர்ச்சியுடன் விருதுநகர் இரண்டாம் இடத்திலும், 97.51% தேர்ச்சியுடன் கரூர் மாவட்டம் 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

More articles

Latest article