கோயம்புத்தூர்

கோயம்புத்தூரை சேர்ந்த இரு மாணவிகள் துப்பாக்கி உரிமம் கேட்டு மாவட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

கோயம்புத்தூர் நகரில் உள்ள நல்லாம் பாளையம் என்னும் பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். சாந்தகுமாரின் மகள் தமிழ் ஈழம் என்பவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் படித்து வருகிறார். சாந்தகுமாரின் மற்றொரு மகள் ஓவியா என்பவர் துடியலூரில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கிறார்.

சகோதரியர் இருவரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். தங்களுக்கு துப்பாக்கி வைத்திருக்க உரிமம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் ஈழம் மற்றும் ஓவியா தங்கள் விண்ணப்ப மனுவில், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமை சம்பவத்தால் தாங்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதாகவும் அதனால் தங்கள் பாதுகாப்புக்காக  துப்பாக்கி வைத்திருக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.