கோவை :
ஈரோடு, சிவகங்கை, திருப்பூரைத் தொடர்ந்து கோயமுத்தூரும் கொரோனா இல்லாத மாவட்டமாகி உள்ளது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகநாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பேயாட்டம் ஆடி வருகிறது. குறிப்பாக தமிழக்ததில் தலைவிரிக்கோலமாக ஆடி வருகிறது. இங்கு நாளுக்கு நாள் அதன் தாக்கம் தீவிரமாகி வருகிறது.
இந்த நிலையில், தற்போது கோவை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இங்குள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் இதுவரை 146 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் ஒருவர் மட்டுமே பலியாக மற்றவர்கள் படிப்படியாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கர்ப்பிணிப் பெண் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் இன்று (13/05/2020) காலை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதன் காரணமாக கோவை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.
ஏற்கனவே கொரோனா இல்லாத மாவட்டங்களாக ஈரோடு, சிவகங்கை, திருப்பூர் உள்ள நிலையில், தற்போது கோவையும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.