Skip to content
  • Sat. Sep 26th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி… செங்கோட்டையன் டிவிட்…

May 13, 2020

சென்னை:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்திற்கு வரும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 12ம் வகுப்பின் கடைசி தேர்வு போன்றை ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தேர்வுக்கு வரும் மாணவ மாணவிகளின் வசதிக்காகவும், அவர்களை தேர்வுக்கு அழைத்து வரவும்,  தேர்வு முடிந்த பின்னர் அவரவர் பகுதிகளில் விடவும் பேருந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜுன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும்,, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2-ம் தேதியும், 12-ம் வகுப்பை சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜுன் 4-ந்தேதி தேர்வு நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மே 17ந்தேதிக்கு பிறகு 50 சதவிகித பேருந்துகளே இயங்கும் என தமிழகஅரசு அறிவித்திருந்தது. இதனால், மாணவர்கள் தேர்வுக்கு வருவதில் சிக்கல் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் டிவிட் போட்டுள்ளார். அதில்,
தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யபட்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு  கூறியுள்ளார்.

Post navigation

ஈரோடு, சிவகங்கை, திருப்பூரைத் தொடர்ந்து கோவை கொரோனா இல்லாத மாவட்டமானது….
சென்னை மக்களுக்கு டெலிமெடிசின் மூலம் கொரோனா சிகிச்சை… ‘GCC Vidmed’ செயலி அறிமுகம்…

Related Post

தமிழ் நாடு

வீரமணி POCSO வழக்கு: “TRP-யைவிட வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் உள்ளன” வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer