சேலம்

சேலத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரசாரம் செய்துள்ளார்.

முதல்வர் மு க ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் சேலம் வேட்பாளர் செல்வகணபதி உள்ளிட்டோரை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்துள்ளார். 

அப்போது முதல்வர், 

மூன்று ஆண்டு கால தி.மு.க.வின் நல்லாட்சி, தமிழகத்தில் நடக்கும் உண்மையான மக்களாட்சி. தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சியானது நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியால் சாமானிய மக்களின் தூக்கம் தான் போய்விட்டது. 

சாதாரண மக்கள், பெண்கள், சிறுபான்மையினர் என பலரும் மோடி ஆட்சியால் நிம்மதியும் தூக்கமும் இழந்தனர். தேர்தல் பத்திர ஊழலுக்கு பின் வட மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறாது என்று உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. உளவுத்துறை அறிக்கைக்குப் பிறகு மோடி தூக்கத்தை தொலைத்து நிற்கிறார். 

என் கையில் ஒரு பட்டியல் இருக்கிறது… நான் ஆதாரத்துடன்தான் பேசுவேன். ஏனென்றால் நான் தலைவர் கலைஞரின் மகன். இதில் இருக்கும் பெயர் பட்டியல் ஏதோ தேசத் தலைவர்களோ… சமூகச் சேவகர்களோ இல்லை… எல்லோரும் சட்டம்–ஒழுங்கைக் கெடுக்கும் ரவுடிகள்! இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம், இப்போது எங்கு இருக்கிறார்கள் தெரியுமா? 

அத்தனை பேரும் பா.ஜ.க.வில்தான் இருக்கிறார்கள்! வழக்கமாக இந்தப் பட்டியல் காவல் நிலையத்தில்தான் ஒட்டப்பட்டிருக்கும்… 32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 1977 வழக்குகள் இருக்கும் 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களின் பெயர் என்ன? பா.ஜ.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? எல்லா ரவுடிகளையும் உங்கள் கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றி நீங்கள் பேசலாமா?” 

என்று வினா எழுப்பியுள்ளார்.