குன்னூர்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி உள்ளார்.
நேற்று பிற்பகல் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இதில் பிபின் ராவத், அவர் மனைவி உள்ளிட்ட 11 ராணுவ அதிகாரிகள் உயிர் இழந்துள்ளனர்.
இவர்கள் உடல் ராணுவ மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த 13 உடல்கள் வெலிங்டன் சதுக்கத்தில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டன. இங்குத் தமிழக அரசு சார்பாக மு க ஸ்டாலின் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த 13 பேரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன், ஆகியோரும் தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.