சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் ரூ.96.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 96 கோடியே 75 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், கலையரங்கம், விருந்தினர் மாளிகை, உடற்பயிற்சிக்கூடம், அணுகுசாலை, விடுதிகள், பணிமனைகள், கழிவறை தொகுதிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டிடம் போன்ற பல்வேறு கட்டிடங்களை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அந்த வகையில்,  விடுதிகள், பணிமனைகள், கழிவறை தொகுதிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டிடங்கள் மற்றும்  சத்தியமங்கலம், சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தென்காசி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை கிராமத்தில் அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரியில் 4 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், விருந்தினர் மாளிகை, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் அணுகு சாலை ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதே போல் சத்தியமங்கலம், சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தென்காசி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ. வேலு, ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.