சென்னை: CM சார்..என்னை என்ன வேணாலும் பண்ணுங்க..அவங்கள விட்ருங்க.. கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

செப்டம்பர் 27ந்தேதேதி அன்று கரூரில் நடைபெற்ற விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விஷயத்ரதில் பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், காவல்துறை பாதுகாப்பு, அதிக அளவிலான கூட்ட நெரிசல், மேலும் விஜயின் முதிர்ச்சியின்மை என பல தரப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகிறார். மேலும், கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது . இதுதொடர்பாக செய்திகள், விடியோ வெளியிட்டவர்களை அரசு அவதூறு பரப்புவதாக கூறி கைது செய்துள்ளதும், ஒரே இரவில் உயிரிழந்த 30க்கும் மேற்பட்டோருக்கு உடற்கூறாய்வு செய்துள்ளம் பேசும்பொருளாகி உள்ளது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் உருக்கமாக, தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார், அதில், “நடக்க கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே. அந்த நேரத்தில் இத்தனை பேர் பாதிக்கப்பட்ட போது அங்கிருந்து என்னால் வரமுடியும். அங்கு செல்ல எண்ணம் இருந்துச்சு. ஆனால் அங்கு போனால் வேறு எதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பயத்தில் போகவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும்.
குடும்பத்தினரை இழந்து தவிப்போருக்கு ஆறுதல் கூறுகிறேன். கிட்டதட்ட 5 மாவட்டங்களுக்கு சென்றோம். அங்கெல்லாம் எதுவும் நடக்கவில்லை. கரூரில் மட்டும் அசம்பாவிதம் ஏன் நடக்கணும். மக்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும். சீக்கிரம் உண்மைகள் அனைத்தும் வெளிவரும். என் தொண்டர்கள் மீது கை வைக்க வேண்டாம். எங்களுக்கு தந்த இடத்தில் நாங்கள் பேசினோம்.எம். சார் பழி வாங்க வேண்டுமென எண்ணம் இருந்தால் நான் வீட்டிலேயோ, அலுவலகத்திலோதான் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.