டுப்பி

ர்னாடகாவில் மதுவிலக்கு அமுல்படுத்தும் யோசனை இல்லை என முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.

கர்னாடகாவில் தேர்தலுக்கு முன்பாக மதுவிலக்கு அமுல்படுத்தப் படலாம் என ஒரு செய்தி உலவி வந்தது.  வரும் 2018ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை கவர சித்தராமையா அரசு அவ்வாறு திட்டமிட்டுள்ளதாக பலரும் கூறி வந்தனர்.

இந்நிலையில் நேற்று உடுப்பி வந்திருந்த முதல்வர் சித்தராமையா, “தற்போது  உள்ள நிதி நெருக்கடியில் மதுவிலக்கு கொண்டுவரும் யோசனை அரசுக்கு சிறிதும் இல்லை.   அதை அமுல்படுத்தும் முன்பு அரசின் வருவாயை முன்னேற்ற பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தற்போதைய நிலையில் அந்த நடவடிக்கைகளுக்கு சாத்தியமே இல்லை.  பீகாரில் மதுவிலக்கு எவ்வாறு செயல்படுகிரது என ஆராய ஒரு குழுவை நான் அனுப்பியது உண்மைதான்.  அதற்கும் இந்த தகவலுக்கும் சம்பந்தம் இல்லை” என தெரிவித்துள்ளார்.

கர்னாடகா அரசுக்கு வருமானம் அதிகம் ஈட்டித் தருவது மதுபான விற்பனை என அரசின் கலால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   மேலும் ஜி எஸ் டி அமுலாக்கத்துக்குப் பின் அரசுக்கு வரி வருமானம் வெகுவாக குறைந்துள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.