புதுக்கோட்டை

லையில் குண்டு பாய்ந்ததால் உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் தமிழ்நாடு காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் கடந்த 30ம்தேதி காலை 8 மணியளவில் மத்திய தொழிலக பாதுகாப்பு படைவீரர்கள் (சிஐஎஸ்எப்) மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் திருச்சி மத்திய மண்டல போலீசாரும் துபாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.  அந்த நேரத்தில் பசுமலைப்பட்டி மலையடிவாரத்திலிருந்த குடிசை வீட்டில் உணவருந்தி கொண்டிருந்த கலைச்செல்வன் மகன் புகழேந்தி (11) தலையில் எதிர்பாராத விதமாகத் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

உடனடியாக சிறுவன் புகழேந்தி, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் சிறுவனின் தலையில் மூளைப்பகுதி வரை குண்டு பாய்ந்து இருந்தது தெரிய வந்தது.   சிறுவன் புகழேந்தி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மூலம் துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது

புகழேந்தியின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, மருத்துவர்களால் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவத்தை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உயிரிழந்த புகழேந்தியின் குடும்பத்திற்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.