சென்னை

மிழகத்தில் வரும் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

திமுக அரசு தேர்தல் அறிக்கையில் வாக்களித்தபடி மகளிருக்கு மாதம் ரூ1000 வழங்கும் திட்டம் வரும் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.  இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு,  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு குறும் செய்தி மூலம் தகவல்கள் அனுப்பப்படுகின்றன..

இந்நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டிவிட்டரில்,

 

மன நிறைவு அடைவார்கள்…!

 ———-

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்காக செப்டம்பர் 15 ஆம் தேதி, என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய Toll-Free எண்ணும் சேர்க்கப்பட வேண்டும்.

திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்.

மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும். அப்படி அனுப்பினால் பெரும்பாலானவர்கள் மனநிறைவு அடைவார்கள்.

சிலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம் – மறுபடியும் நம்மிடம் விண்ணப்பிப்பார்கள். அவர்களுக்கும் அத்தகைய வாய்ப்பை நாம் வழங்க வேண்டும்.

வாய்ப்பை வழங்கினால் பொதுமக்களுக்கு அரசின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும்.

 – மு.க. ஸ்டாலின்

என்று பதிவிட்டுள்ளார்.