சென்னை

ன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவுரையாளர் பணி நியமன ஆணை வழங்கியுள்ளார்.

சென்னை, மதுரை, திருவையாறு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் தமிழக அரசு இசைக் கல்லூரிகளில் குரலிசை, வயலின், வீணை, நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்புகளும் மேற்காண் பிரிவுகளுடன் புல்லாங்குழல், மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங் ஆகிய இசைக்கருவிகள் மற்றும் நாட்டுப்புறக்கலையில் பட்டயப்படிப்புகளும், நட்டுவாங்கம் மற்றும் இசையாசிரியர் படிப்புகள் ஓராண்டு பட்டயப்படிப்புகளாகவும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (18.2.2025) தலைமைச் செயலகத்தில், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சென்னை மற்றும் மதுரை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் குரலிசை, வயலின், தவில் மற்றும் புல்லாங்குழல் ஆகிய பிரிவுகளில் நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவுரையாளர்கள் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் (மு.கூ.பொ) கவிதா ராமு ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.