சபாநாயகருடன் எடப்பாடி திடீர் சந்திப்பு!

Must read

சென்னை,

ரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டமன்ற சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி திடீரென சந்தித்து பேசினார்.

அதிமுக அம்மா அணியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரிவு காரணமாக, டிடிவி தினகரனை ஒருசில எம்எல்ஏக்கள் சந்தித்து வருகின்றனர்.

இதற்கிடையில் வரும் 14ந்தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாளை அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,  திடீரென சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசி வருகிறார்.

ஏற்கனவே ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன், பாரதியஜனதா தமிழக தலைவர் தமிழிசை போன்றோர் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொல்லி வரும் நிலையில்,

தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும் 21க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருவதால் ஆட்சி கவிழ்ந்துவிடும் சூழல் உருவாகி உள்ளது.

அதிமுக  அரசில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது. இது   தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article