இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! முதல்வர் எடப்பாடி அதிரடி!!

சென்னை,

திமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இதன் காரணமாக  தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளியான  டிடிவி தினகரன் மீண்டும் கட்சி பணியில் ஈடுபடுவேன் என்று அறிவித்ததை தொடர்ந்து, அதிமுக அம்மா அணியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அனைத்து அமைச்சர்களும் தீவிர ஆலோசனை நடத்தினர். பின்னர் முதல்வரை சந்தித்தும் ஆலோசனை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து,  கட்சியிலிருந்து தினகரன் தள்ளிவைக்கப்பட்டுள்ளார். அவரது தலையீடு இல்லாமல் ஜெயலலிதா ஆட்சி நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

“இன்னும் 60 நாள்கள் பொறுத்திருப்பேன். கட்சி வளர்ச்சியடைய வில்லையென்றால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்று தினகரன் கூறியிருந்தார்.

இதனிடையே, அனைத்து முதல்வர் அறையிலும் முதல்வர் பழனிசாமி படங்கள் இன்று வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, டிடிவி தினகரனுக்கு  ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்களில் சிலர்  ஆதரவுகொடுத்துவருகின்றனர். பெரம்பூர் எம்எல்ஏ., வெற்றிவேல், ஆண்டிபட்டி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன், சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியன் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-கள் நேற்று தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இன்று, பரமக்குடி எம்எல்ஏ முத்தையா, மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், செய்யாறு மோகன், அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன் ஆகியோர் தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதுவரை 18 எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர்.‘

இதற்கிடையில்  3 நாட்கள் மாவட்ட வாரியாக எம்எல்ஏக்களுடன், முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் அதிகரித்து வருவதால், இன்று மாலை 3 மணிக்கு எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தமிழக அரசியலில் குழப்பமான சூழல் காணப்படுகிறது  தெரிவித்துள்ளார்.

 


English Summary
AIADMK MLAs meeting this evening, Chief Minister Edappadi arrange