சென்னை

மத்திய அரசு தமிழக மக்களுக்கு என்ன செய்தது என முதல்வர் மு க ஸ்டாலின் வினா எழுப்பி உள்ளார்.

 

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசின் பேட்டியைப் பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்

அந்த பதிவில் முதல்வர் மு க ஸ்டாலின்,

” நமது திராவிட மாடல் அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது.

திராவிட மாடல் அரசு  ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1,000 ரூபாய் அளவுக்குச் செலவில் மிச்சம், காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு, புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1,000 ரூபாய், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு தமிழக மக்களுக்காகச் செய்தது என்ன?  தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு  மத்திய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார்”

என்று தெரிவித்துள்ளார்.