சென்னை
நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, மாபெரும் வெற்றி பெற்ற பிறகுதான் கண்ணை மூடுவேன் என்று உருகினார்.
சென்னை  அறிவாலயத்தில்,  தி.மு.க., சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கருணாநிதி பேசியதாவது:
1mkmதி.மு.க.,வில் இருக்கும் செயல்வீரர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலை வல்லுனர்கள், தொண்டர்கள் அனைவரும் இணைந்து, கட்சியை மேலும் வலிமையுடைய தாக்கவேண்டும். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றார்.  மேலும், நான் என் ஏழாவது வயதில்  இயக்கத் தொண்டர் களோடு இணைந்தேன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி பணியாற்றி வருகிறேன்.
என்னைப்பற்றியும், என் உடல் நிலையை பற்றியும்  யாரும்கவலைப்படத் தேவையில்லை; தொடர்ந்து பணியாற்றுவேன்; பல மடங்கு வெற்றியை தருவேன். வயதும், உடலும் வலிமை பெற்று கட்சி சிறப்பாக செயல்படவும், தொண்டாற்றவும் முடியும்.
இங்கு எனக்கு முன்னால்  பேசியவர்கள், நான் இருக்கும் வரை, இந்த இயக்கத்தை அசைக்க முடியாது எனக் கூறினர், ஆனால்
நான் இல்லாத போதும், இந்த இயக்கத்தை அசைக்க முடியாது. அதற்கான திட்டங்களை எல்லாம் வகுத்து தந்துவிட்டுதான், இந்த கருணாநிதி போவான், என்னால் முடிந்த வரை உழைப்பேன்.
என் உறவினர்கள், நண்பர்கள் கூறினாலும் நான் ஓய்ந்துவிட மாட்டேன். மறந்தும், ‘ஓய்வெடுத்துக் கொள்கிறேன்’ எனக் கூற மாட்டேன்; எப்போதும் நான் உங்களுக்கு வேலைக்காரன்.வயது, 93ஆகி விட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம்.  கட்சிக்காக தொடர்ந்து உழைப்பேன்; உழைத்துக் கொண்டே இருப்பேன்; அலுத்து போகும் வரை உழைப்பேன் என்றார்.
இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என யார் வந்தாலும், ஒரு கை பார்ப்போம். மாபெரும் வெற்றியை தேடி தந்துவிட்டு தான் நான் கண்ணை மூடுவேன் என்றும் உருக்கமாக பேசினார்.