சென்னை:

கிராமப்புறத் தூய்மை, ஊரகப் பகுதிகளில் சுகாதார முன்னேற்றம் போன்றவைகளில்,  தமிழகம் அகில இந்திய அளவில்  முதலிடம் பிடித்துள்ளத. இதற்கான  விருதை பிரதமர்  மோடி தமிழக அமைச்சர் வேலுமணியிடம் வழங்கினார்.

மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் சார்பில், ஊரகப் பகுதிகளின் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றின் முக்கிய அளவீடுகளை கொண்டு வருடாந்திர துப்புரவு கணக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் கிராமப்புற தூய்மை அடிப்படையில் தமிழகம் சிறந்த மாநிலங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 11 வது தரவரிசையில் இருந்து மாநிலம் முதலிடத்திற்கு நகர்ந்து, அரியானா மற்றும் குஜராத்தை இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களுக்கு தள்ளியுள்ளது.

இந்த ஆய்வைத் தொடர்ந்து தமிழகம் முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விழாவில்  தமிழகஅரசுக்கு பிரதமர் மோடி விருது வழங்கி கவுரவித்து உள்ளார்.