திருவள்ளூர்:

யுதப்படை காவலர்கள் இருவருக்குள் நிகழ்ந்த மோதலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுந்தரபாண்டியன்

உசிலம்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன் மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அமிர்தராஜ் ஆகிய இருவரும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்கள். இவர்கள் திருவள்ளூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.

நேற்று இருவரும் திருவள்ளூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் பெண் காவலர் சரண்யா என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக முற்றியது. ஒரு கட்டத்தில் அமிர்தராஜ், தன்னிடமிருந்த கத்தியால் சுந்தரபாண்டியன்  குத்தினார். ரத்தம் அதிகமாக வெளியேறி சுந்தரபாண்டியன் மரணமடைந்தார்.

இந்த கொலை குறித்து தற்போது திருவள்ளூர் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். தனியார் விடுதியில் தங்கியிருந்த இரு காவலர்களும், எதற்காக பெண் காவலர் வீ்ட்டுக்குச் சென்றார்கள், எது குறித்து வாக்குவதம் ஏற்பட்டது என்கிற கோணத்தில் விசாரணை துவங்கியிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.